திங்கள், 22 டிசம்பர், 2014

தமிழ்த்தாய் தந்நிலை விளக்கம்! {HISTORY OF TAMIL LANGUAGE}

தமிழ்த்தாய்  தந்நிலை விளக்கம்! {HISTORY OF TAMIL LANGUAGE}

வெட்டவெளி தான் வெடித்து வந்துதித்த அய்யன் அவன்!
ஆதி அந்தம் இல்லா அருட்பெரும் சோதியவன் !
சித்தன் சிவனாரின் திருவடியில் திருவருளால்
அத்தன் அருட்கடையால் உதித்திட்டேன் இப்புவியில்!
யான் உதித்த காலத்தில் மொழியில்லை! மதமுமில்லை!
அய்யன் சிவனின்றி அருள்கொடுக்க எதுவுமில்லை!
அச்சிவ அவைதனிலே அரியணையில் நானிருந்தேன்
அவனியில் பிறமொழியும் தோன்றாக்காலமது !
பக்றுளி ஆறு பொங்கும் (குமரி)கண்டமது என் பிறப்பு !
புவிமுழுதும் ஆண்டிருந்த பெருமானின் தனிச்சிறப்பு!
முதற் தமிழ் சங்கத்தில் சிவன் முதல்வ னாயிருந்தான் !
முழுவதும் அறிய அங்கு மூழ்கிப்பார் தமிழின் நிலை!
தாயான நிலையில் இங்கு பிறந்ததுவே பல நிலைகள் !
தாயுமாயான அய்யன் தனிப்பெரும் அருளினாலே!
வளவன் தான் ஏவா வானுர்தி அங்கு உண்டு!
வளமாய் தாவி செல்லும் நாவாய்கள் பெரிதும் உண்டு !
ஞானமது அனைவர்க்கும் பொதுவாய் இருந்ததங்கே !
ஞானியர்கள் திருநிலையில் யான் சிறந்து வளர்ந்தேனே!
பலநிலைகள் கூறுதற்கு பரமனவன் ஆணையில்லை
சிலநிலை அறிந்த சித்தர் அருள் நிலையை கூறினார்கள்
இந்தநிலை மாற்றிடவே வந்ததுதான் பற்பள்ளுழி
பந்தநிலை மாற்றும் எந்தன் அய்யன்நிலை ஆரறிவார்!
அண்டங்கள் புரண்டதுவே (குமரி)கண்டமது அமிழ்ந்ததுவே
அறிவான  தமிழினந்தான்   நிலமேறி மீண்டதுவே!
பின்னை மொழிகளெல்லாம் சிறப்பாக இருப்பதானால்
அன்னை யான் பெற்ற மகிழ்வுக்கும் எல்லையுண்டோ!
எந்நிலை உணர்வதற்கு தனித்தமிழர் ஆளவில்லை!
இந்நிலையில்  யான்  அரியணையில் கால்பதிக்க
எண்ணம் எழவில்லை இந்தநிலை மாறாதோ!
எந்தன் நிலையெண்ணி ஏங்குகிறேன் என் இனமே
உந்தன் உணர்தலின்றி என் ஏக்கம் தீர்ந்திடுமோ !
அனையான் புலம்புகின்றேன் உன்நிலையை உணர்ந்திடுவாய் !

ஒதியடிமை
(என் உள்ளத்தில் உதித்தது)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக